நீ.மரியசேவியர் அடிகளார்
நீ.மரியசேவியர் அடிகளார்
மரியசேவியர் அடிகள், நீ. (1939.12.03 – ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த கலைஞர், புலவர், சமயப் போதகர். இவர் ஆரம்பக்கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். இவர் தன் வாழ்வைக் குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ். மருதனார் குருமடத்தில் சேர்ந்து சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1956 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பைக் கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார்.
இவர் 1958 ஆம் ஆண்டு இசையியலில் உயர் பட்டம் பெறும் பொருட்டு ரோம் நகருக்குச் சென்று தனது 21 ஆவது வயதில் பி.ஏ, எம்.ஏ பட்டங்களைப் பெற்றதுடன் உரோம் தமிழ்ச் சங்கத் தலைவராக 1960- 1961 ஆம் ஆண்டு பணிபுரிந்தார். இவர் ஒருவர்தான் பட்டப் படிப்பின் இறுதி ஆண்டில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் முழுப்புள்ளிகளையும் பெற்றுப் பாராட்டுப்பெற்றவர். இவர் 1962 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் திகதி ரோம் நகரில் தனது 22 ஆவது வயதில் திருச்சபைச் சட்டத்தின்படி வயதுக்குறைவால் பரிசுத்த தந்தை 23 ஆம் அருளப்பரின் சிறப்பு அனுமதியுடன் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
இவர் பதினைந்து வயதில் எழுதிய “மலருந் தமிழகமே மறந்து விடாதே” என்னும் கட்டுரை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மலரில் வெளிவந்தது. இவர் பத்திரிசியார் கல்லூரியில் பயிலும் காலத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர். சிறுவயது முதல் நாடகங்களில் நடித்துவந்த இவர், 1966 ஆம் ஆண்டு உரும்பராயில் ‘திருமறைக் கலாமன்றம்’ என்ற அமைப்பை நிறுவிக் காட்டிக்கொடுத்தவன், பலிக்களம், நல்லதங்காள், நெஞ்சக்கனல், நீ ஒரு பாதை, யூதகுமாரி முதலான பல நாடகங்களை உள்ளூரிலும் ஐரோப்பிய தேசங்களிலும் மேடையேற்றினார். இவ் அமைப்பினூடாக 1990 ஆம் ஆண்டு “கலைமுகம்” என்னும் காலாண்டுக் கலை இலக்கிய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் சிறிது காலம் பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பன்மொழிப்புலமை பெற்றிருந்த அடிகளார் ஆங்கிலத்தில் Cathalic-Hindu Encounter, Jaffna: The Land of the Lute, Siddhanta Tradition’s Philosopher Sages, Life and Times of Orazio Bettachini ஆகிய நூல்களையும் ஜேர்மன் மொழியில் Die Mentaphysik des shaiva siddhanta என்ற நூலையும் அளவுகோல், கதையும் காவியமும், ஒரு துளி, கபடமனக் காவலன், எழுதிய கரம் முதலான நாடகங்களையும் அருளும் இருளும் என்ற நடன நாடகத்தையும் மூவேந்தர், சிங்க குலச் செங்கோல் ஆகிய நாட்டுக்கூத்துக்களையும் கலைமுகம் என்ற கட்டுரைத்தொகுப்பையும் சுவைத்தேன் என்ற கவிதைத் தொகுப்பையும் ஆக்கியளித்துள்ளார்.
இவருக்கு இவரது சமய, கலைப் பணிகளைப் பாராட்டி 1997 ஆம் ஆண்டு ஜேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் அருட்தந்தை ஜெயசேகரம் அடிகளார் பொன்னாடை அணிவித்துக் “கலைத்தூது” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார். மேலும் இவரின் இவருக்கு ஆளுநர் விருதும் யாழ். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் அளித்துள்ளது.
மரியசேவியர் அடிகளார், நீ பற்றி தினகரன் இணையத்தில்
கலை வளர்த்த குருமகன் பேராசிரியர் அருட்தந்தை மரியசேவியர் அடிகளார்
தமிழ் இலக்கியத்தின் ஊடாக கிறிஸ்தவத்திற்கும், கிறிஸ்தவர்கள் ஊடாக தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றியவர்கள் வரிசையில் இயேசு காவியம் எழுதிய கண்ணதாசன், தேம்பாவனியின் படைப்பாளி வீரமாமுனிவர், இரட்சணிய யாத்திரிகம் எழுதிய கிருஷ்ணபிள்ளை ஆகியோர் தமிழ் இலக்கிய உலகில் இன்றும் பேசப்படுகின்றனர். இதேபோன்று ஈழத்தில் ஞானப்பிரகாசர், தாவீது அடிகள், தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் போன்று கிறிஸ்தவ துறவிகளின் வரிசையில் கலைத்தூதராக பணிபுரிபவர் திருமறைக் கலாமன்ற இயக்குநர் பேராசிரியர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளார் ஆவார்.
இவர் 1939 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இளவாலையில் பிறந்தார். தமது ஆரம்பக்கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். அதைத் தொடர்ந்து 1952ஆம் ஆண்டு குருத்துவப் பணியில் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் பொருட்டு யாழ். மருதனார் குரு மடத்தில் சேர்ந்து, அதே ஆண்டில் சம்பத்திரிசியார் கல்லூரியின் தமது கல்வியைத் தொடர்ந்தார். குருமடத்தில் 1955இல் பாடகர் குழாமின் தலைவராகவும், ஓர்கன் வாசிக்கும் பொறுப்புடையவராகவும் நியமிக்கப்பட்டார். பதினைந்து வயதில் இவர் எழுதிய “மலருந் தமிழகமே மறந்து விடாதே” என்னும் கட்டுரை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மலரில் வெளிவந்தது.
1956 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, பத்திரிசியார் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று குருத்துவ மேல் நிலைப்படிப்பைத் தொடரும் பொருட்டு கண்டி அம்பிட்டிய குருமடத்தில் சேர்ந்தார். 1957 இல் இந்து சமயத்தில் இவருக்கு இருந்த ஈடுபாடு வெளியானது. இந்து சமய பாடத்திற்கு அவர் எழுதிய விடைத்தாளுக்கு பேராசிரியர் யுவக்கீம் அடிகள் நூற்றுக்கு நூற்றி ஐம்பது புள்ளிகளைக் கொடுத்து வளர்ந்து வரும் இளைஞனின் பொதுநோக்கைப் பாராட்டினார். அதே ஆண்டு “தனி நாயகம்” என்னும் நாடகத்தின் கதாநாயகர் பாத்திரத்தை ஏற்று நடித்து அந்நாடகத்தை இயக்கினார்.
1958ஆம் ஆண்டு இசையியலில் உயர் பட்டம் பெறும் பொருட்டு ரோம் நகருக்கு சென்று தனது 21ஆவது வயதில் கி.ஹி (கி.தி) ழி.ஹிh (ணி.தி) எனும் பட்டங்களைப் பெற்றார். 1960, 1961ஆம் ஆண்டுகளில் உரோமை தமிழ்ச் சங்கத்துத் தலைவராகவும், பணிபுரிந்தார். பட்டப் படிப்பின் இறுதி ஆண்டு சர்வதேச மாணவர்களில் இவர் ஒருவர்தான் நேர்முகத் தொகுப்புத் தேர்வில் முழுப்புள்ளிகளையும் பெற்றுப் பாராட்டுப்பெற்றவர்.
1962ஆம் ஆண்டு யூலை 1ஆம் திகதி ரோம் நகரில் தனது 22ஆவது வயதில் திருச்சபைச் சட்டத்தின்படி வயதுக்குறைவால் பரிசுத்த தந்தை 23ஆம் அருளப்பரின் சிறப்பு அனுமதிபெற்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1963ஆம் ஆண்டு மன்னார் நகரின் உதவிப் பங்குத் தந்தையாகப் பணிபுரிந்தார். அத்தருணத்தில் அம்மாவட்டத்தில் முதன் முதலாக மானுடர்கள் நடித்த “திருப்பாடுகளின் காட்சியை” 1964 ஆம் ஆண்டு அரங்கேற்றினார். அக்காலகட்டத்திலிருந்தே பெயரிடப்படாத திருமறைக் கலாமன்றத்தை இயக்கிவந்தார்.
1966ஆம் ஆண்டு உரும்பிராயில் முதன் முதலாக “திருமறைக் கலாமன்றத்தை” உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து, பின்னர் யாழ். நகரிலும் அதை பதிவு செய்தார். இத்துடன் சிறிது காலம் “பாதுகாவலன்” பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் இலங்கை அரசின் கலாசாரக் குழுவின் ஆலோசகராகவும் கடமையாற்றினார். இலங்கை வானொலிக் கத்தோலிக்கத் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றினார். 1970ஆம் ஆண்டு பாப்பரசர் 6ஆம் சின்னப்பரின் வருகையின் பொழுது வானொலி அறிவிப்பாளராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
1972ஆம் ஆண்டு இந்தியா சென்று மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கசடறக் கற்று வித்துவான் புலவர் பட்டத்தைப் பெற்றார்.
1978இல் இருந்து 1988 வரையிலான பத்து வருடங்களையும் உடல் நலம் குன்றிய நிலையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மற்றும் வெளிநாடுகளிலும் செலவு செய்து பல்வேறு கலை, கலாசார அரங்கியல் நிகழ்வுகளைப் பார்த்தும், கேட்டும் பட்டறிவுத் தன்மையுடன் தாயகம் திரும்பினார்.
1990ஆம் ஆண்டு “கலைமுகம்” என்னும் காலாண்டுக் கலை இலக்கிய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக இன்று வரை அதனை வெளியிட்டு வருகிறார்.
1993ஆம் ஆண்டு யாழ். குடாநாட் டில் வாழும் 23 நாட்டுக் கூத்து அண்ணாவிமா ருக்குப் பொன் னாடை போர்த்தித் தமிழ்விழா மேடை யில் அவர்களைக் கெளரவித்தார். இத்துடன் 1995ஆம் ஆண்டு யாழ். நகரில் முதன் முதலாக ஒரு “நாடக அரங்கில்” கண்காட்சியை நடாத்தினார்.
மேலும் 1995ஆம் ஆண்டு இடம்பெயர்வின் போது இவர் கனடாவில் இருந்தும் கூட தனது கலைஞர்களை ஊக்கப்படுத்தி உதவிசெய்து மிருசுவில் நகரில் “கல்வாரிச் சுவடுகள்” என்னும் தவக்கால நிகழ்ச்சியை அரங்கேற்றி வெற்றிகண்டார்.
1997 ஆம் ஆண்டு ஜேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் அருட்தந்தை ஜெயசேகரம் அடிகளார் இவருக்குப் பொன்னாடை அணிவித்து “கலைத்தூது” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார்.
மேலும் இவரின் ஆர்வத்தை அர்ப்பணிப்பையும் பாராட்டி இவருக்கு ஆளுநர் விருதும் யாழ். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தையும் அளித்தனர். இத்துடன் அருட்தந்தை பேராசிரியர் மரியசேவியர் அடிகளார் உருவும், திருவும், அறிவும், ஆற்றலும், அன்பும், பண்பும் நிறைந்த ஒரு பெருமகன். இவர் சிறந்த கத்தோலிக்க மத குருவாக இருந்தும் ஏனைய சமயங்களையும், சமயத்தலைவர்களையும் மதிக்கும் பெருங்குணம் படைத்தவர்.
மேலும் பேசப்பழக இனியவர், இரக்கமும் உருவானவர், தன்னலம் விரும்பாத பொதுநலவாதியே நான்கண்ட பேராசிரியர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளார் ஆவார். ஆகையினாலே குருத்துவப் பணியில் 50 ஆண்டுகளை நினைவுசெய்கின்ற இப்பெருமகனை நாம் மனதார வாழ்த்து கின்றோம்.
“கலாபூஷணம்”
செல்வத்தம்பி மாணிக்கவாசகர்
https://noolaham.net/project/87/8668/8668.pdf
நீ.மரியசேவியர் அடிகளார் பற்றிய தகவல்கள்
01.விக்கிப்பீடியாவில் இருந்து
02.
03. நினைவில் வாழும் கலைத்தூது அருட்தந்தை……
https://shorturl.at/1jSvh
04.மரியசேவியர் அடிகளார் நினைவேந்தல்
https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1391606507857345