நாடக அரங்கக்கல்லூரி
1976 ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆசிரியர்களுக்கான நாடக டிப்ளோமா பயிற்சியில் கலந்து கொண்ட குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் அப்பயிற்சியினால் ஊக்கம் பெற்று யாழ்ப்பாணத்தில் நாடக அரங்க கல்லூரியை 23.01.1978ல் ஸ்தாபித்தார்.
குழந்தை ம. சண்முகலிங்கம், அ. தாஸிஸியஸ், ஏ. ரி. அரசு, வி.எம்குராசா, பிரான்ஸிஸ்ஜெனம், ஏ. ரி பொன்னுத்துரை, இளைய பத்மநாதன் ஆகியோரின் துணையுடன் யாழ் வீரசிங்க மண்டபத்திர் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாடக அரங்க கல்லூரியின் நோக்கம். நாடகத்தினை கல்வி முறையாக்கல் முறையான நாடகப் பயிற்சியை வழங்கல். சுய ஆக்க நாடகங்களை தயாரித்தல்.நாடக சஞ்சிகை வெளியீடு.
அ. தாஸிஸியஸ் அவர்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி வழங்கினார்.அரங்கியல் சார் அம்சங்களை உள்ளடக்கி ஈழத்து தமிழர் மத்தியில் முதலாவது அரங்கியலுக்கான சஞ்சிகையாக “அரங்கம்” வெளிவந்தது.
பின்னாளில் நாடக அரங்கக் கல்லூரியை மீளமைப்புச் செய்து 25 வது ஆண்டு நிறைவு விழாவில் “ஆர் கொலோ சதுரர்” மேடையேற்றி வெற்றியும் கண்டனர்