நடிகர் ஒன்றியம்
1970 களில் கொழும்பை மையமாகக் கொண்டு உதயமாகின்றது.
அக்காலத்தில் நாடு தழுவிய முறையில் நெல்லியடியில் இயங்கிய அம்பலத்தாடிகள் குழு. கொழும்பில் இயங்கிய கூத்தாடிகள் குழு, மட்டக்களப்பில் இயங்கிய நாடகசபா என்பவற்றுடன் சிறு சிறு குழுக்களையும் இணைத்தே “நடிகர் ஒன்றியம்” உருவாகியது.
நா. சுந்தரலிங்கம், இ.சிவானந்தன், க. சிவதம்பி ஆகியோர் இவ்வமைப்பினை ஒன்றிணைப்பதில் முன்னின்று உழைத்தனர்.
இங்கு நாடகங்களை நெறியாள்கை செய்தோர் ஐரோப்பிய நெறியாளர்களின் பயிற்சிப் பட்டறைகளில் பங்கு கொண்டவர்கள்.
1974 இல் கந்தன் கருனை, கோடை, புதியதொரு வீடு என்பன நடிகர் ஒன்றியத்திற்காக அ. தாசிசியஸ் அவர்களினால் நெறியாள்கை செய்யப்பட்டது.
க. பாலேந்திரா அவர்களின் நெறியாள்கையில் மழை. நட்சத்திரவாசிகள் தயாரிக்கப்பட்டது. சங்காரம் – சி. மௌனகுரு அவர்களினால் நெறியாள்கை செய்யப்பட்டது.
கடூழியம், காலம் சிவக்கிறது, அபகரம், விழிப்பு எனும் நாடகத்தை நா. சுந்தரலிங்கம் அவர்கள் நெறியாள்கை செய்தார்.