தயாநிதி தம்பையா
தயாநிதி தம்பையா
தயாநிதி தம்பையா..
தமிழீழத்தின் வடமாகானத்தில் ஆனைக்கோட்டை எனும் கிராமத்தில் திரு திருமதி தம்பையா சிவயோகாம்பிகை தம்பதிகளின் மகனாவார். இவர் ஒரு கலைக் குடும்பத்தின் வாரீசாவார்.இவரது சகோதரர் அப்புக்குட்டி ராஜகோபாலன் மிகவும் பிரசித்தி பெற்ற நாடகக் கலைஞராவார். இலங்கை வானொலி தொலைக்காட்சி மெடைகள் என ஆழுமை செலுத்தியவர்.
தயாநிதி மானிப்பாய் இந்துக்கல்லூரி வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் புனித ஹென்றி அரசர் பாட சாலை என கல்வி பயின்றவர்.
ஆறு வருடங்கள் சவுதி அராபியாவில் பணிபுதிந்தவர். தனது திருமணத்தின் பின் பிரான்ஸ் நாட்டுக்கு அகதியாக வந்து சேர்ந்தார்.
1985ல் பிரான்சில் கலைபணியை மேற்கொள்ளத் தொடங்கியவர்.பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பின் கலை பண்பாட்டுக் கழகத்திலும் பிரான்ஸ் தமிழ் கலைஞர் ஒன்றியத்திலும் நடகங்கங்களை நடிக்கத் தொடங்கியவர். தாயக விடியலுக்கான படைப்புக்களினால் புலம்பெயர் மண்ணில் எழுச்சி நாடகங்களை எழுதி நடித்து வந்தார். இதுவரையில் 350 நாடகப் பிரதிகளை எழுதி இயக்கியும் உள்ளார். ஐரோப்பா அமெரிக்கா கனடா நாடுகளில் தலிழர்கள் வாழும் இடங்களுக்கு கலைப் பயணத்தை அடிக்கடி மேற்கொண்டு வந்துள்ளர்.
உணர்வுகள் எனும் நாடக நூலையும்
ரணங்கள். முகநூல் முத்துக்கள் எனும் கவிதை நூல்களையும் வெளியிட்டுளார்.
பிரான்ஸ் நாட்டில் இயங்கி வந்த TTN தொலைக்காட்சியில் கணேஸ் தம்பையாவின் இயக்கத்தில் நையாண்டி மேளம் எனும் நகைச்சுவை தொடரில் 200 வாரங்கள் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். கூடவே IBC தமிழ் வனொலி TRT தமிழ் வானொலியிலும் ஜனனி புரட்டாத பக்கங்கள் எனும் இரு நாடங்களை எழுதி இயக்கி வந்துள்ளார்.தற்சமயம் ஜேர்மனியில் இருந்து திருமதி சிபோ சிவகுமாரனின் இயக்கத்தில் நாளைய நாம் எனும் நெடும் தொடரில் நடித்து வருகின்றார்..இவரது பிள்ளைகளும் கலைத்துறையில் ஈடுபாட்டுடன் வளர்ந்து வந்துள்ளார்கள். இவரது மகன் பரத நாட்டியத்தினை நர்த்தனாலயா நடனப்பள்ளி அதிபர் ஆசான் திரு தயாழசிங்கம் ஆசிசியரிடம் முறைப்படி கற்று பாரிசில் அரங்கேற்றம் கண்டவராவார்.. இன்றும் ஓயாமல் கலையோடு இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்..