வலைத்தள கருத்தரங்கு
நாடகர்,ஊடகர்,ஏடகர் ஏ.சி.தாசீசியஸ்
நாடகர்,ஊடகர்,ஏடகர் ஏ.சி.தாசீசியஸ்/18/12/20/ அரங்கியல் கருத்தரங்கு
ஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடகர், ஊடகர், ஏடகர் ஏ.சி. தாசீசியஸ் «ஈழ தேசத்தின் அரங்க வரலாற்றை எழுத முற்படுவோர் எவரும் அதில் தாசிசியஸ் மாஸ்டரின் பாத்திரத்தைத் தவிர்த்து எழுதவே முடியாது. இதேபோல் புலம் பெயர் தமிழ் மக்களின் அரங்கவரலாற்றிலும் அவருக்கு முக்கிய பாத்திரம் உண்டு. தாசிசியஸ் என்ற நாடகருக்கு பல்பெரும் பரிமாணங்கள் உண்டு. நல்லதொரு நாடக நெறியாளராக, எழுத்துரு ஆசிரியராக, நடிகராக, அரங்கப் பயிற்சியாளராக, பாரம்பரிய ஆட்டங்கள் பாடல்கள் தெரிந்த, அதனை அரங்கினுள் பயன்படுத்தும் பெரும் நடன இசைக் கலைஞனாக – இவ்வாறு பல்பெரும் தளங்களில் அரங்கவெளிதனில் அவர் விசுவரூபம் எடுத்து நின்றதைஅவர் பேசுகிறார,