நாடகப் படைப்பாக்கச் செல்நெறிகள்
நாடகப் படைப்பாக்கச் செல்நெறிகள்
கலைப்படைப்பொன்றை படைப்பாக்கம் செய்பவருக்கு கற்பனை, படைப்பாக்க உந்து சக்தி, அவதானம் என்பன அவசியமாகின்றன. நாடகப் படைப்பாக்கமும் அவ்வாறே. நாடகத்தைப் படைப்பாக்கம் செய்பவர்களில் ஆசிரியர்கள் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். அத்தகைய ஆசிரியர்களுக்கு உதவுமுகமாக இங்கு சில விடயங்களைக் கூறிச் செல்லலாம் என எண்ண ப்படுகிறது.
நாடகமும் அரங்கியலும் பாடத்தை பயிலும் ஆசிரியரும் மாணவர்களும் மற்றும் பிறரும் நாடக உலகில் நின்று ஈடுபட்டு வருபவருக்கும் பயனுள்ளதாக இத்தகைய படைப்பாக்கம் பற்றிய கட்டுரை உதவலாம்.
ஒரு நாடகத் தயாரிப்பில் நாம் கையாள வேண்டிய படிமுறையான செயற்பாடுகள். ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நாடகத் தயாரிப்புக்கு அவசியம். நாடகம் நடிகரின் கலை எனக் கூறப்படுகின்றபோதிலும் ஒரு நாடகத் தயாரிப்புக்கு நெறியாளனே பிரதானமானவனாகக் கணிக்கப் பெறுகிறான். நாடகம் என்பது கூட்டுக்கலை எனக் கூறுவர் (CollectiveArt) ஆனால் ஓவியம், சிற்பம், இலக்கியம் எனப்பார்க்கும் போது தனி ஒருவனே உரிமையாளனாக இருப்பார். நாடகம் அவ்வாறு அல்ல. அது இசை, நடனம், ஓவியம், கட்டடம், இலக்கியம், சிற்பம், அனைத்தையும் இணைத்து குழு சார்ந்த முறையில் தயாரிக்கப்படுவது ஆகும். இவற்றை இணைத்துச் செயற்படுத்துபவன் நெறியாளர் ஆவான். அவர் கையிலேயே நாடகத்தின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது. கலைஞர்களையும் கைவினைஞர்களையும் தேவைப்படுவனவற்றையும் நாம் பின்வரும் ஒழுங்கில் நோக்கலாம்.
தயாரிப்பாளர் (Producer)
ஒரு நாடகம் தயாரிப்பதற்கான அடிப்படை, தயாரிப்பாளரிலேயே தங்கியுள்ளது. இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
- தொழில் முறைத் தயாரிப்பாளர்
02. பயில்முறைத் தயாரிப்பாளர்
03. கலைத்துவத் தயாரிப்பாளர்
தொழில் முறைத்தயாரிப்பாளர்கள் நாடகப் பண்பாடுள்ள அனைத்து நாடுகளிலும் உள்ளனர். இவர்கள் வர்த்தக நோக்கம் கொண்டவர்கள்.
-இவர்களின் நோக்கம் இலாபமீட்டலே. இதன் மூலம் நாடகத்திற்கான அங்கீகாரமும் அவர்களால் வழங்கப்படுகிறது என்று கூடச்சொல்ல முடியும். மேற்கு நாடுகளிற் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றில் நாடகம் பார்ப்பதற்கான விற்பனவுச் சீட்டின் விலை அதிகரித்ததாக இருப்பதைக் காண முடியும். இதேபோன்ற நிலை ஆசிய நாடுகளிற் காணப்பட்டாலும், நாடகம் பார்ப்பதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டிய தேவை குறைவு என்றே கூறலாம்.
பயில்முறைத் தயாரிப்பாளர்கள் எனும் போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிற் குறிப்பாக எமது இலங்கை போன்ற நாடுகளில் நாடகம் செய்பவர்கள் தொழிலுக்காக அல்லாது தயாரிப்பதைக் காண முடிகிறது. அவர்களுக்குத் தொழில் என்பதை விடத் தமது நிறுவனம் தான் முக்கியமாகிறது.
கலைத்துவமாக தயாரிப்பவர்கள் தமது கலைத்துவ ஆர்வத்தை நாடகங்களாகத் தயாரிக்கின்றனர். இவர்களினால் அதன் திறமான தயாரிப்பிற்கு வழிசமைத்துக் கொடுக்கப்படுகிறது.
எமது ஆசிய மரபிலே, நிறுவனங்கள், கோவில்கள், விடுதலை இயக்கங்கள் எனப்பல்வேறு விதமானவற்றில் தொழிற்படுபவர்கள், தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் தமது கொள்கைகள், கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல அவர்களே நாடகத் தயாரிப்பாளர்களாக மாறு கின்றனர். உதாரணமாக சிக்குன் குனியா” பற்றிய செய்தியை நாடகத்தினூடாக காட்ட வேண்டும் என விரும்பும் சுகாதாரப் பிரிவு தாமே நாடகத்தை தயாரித்து மேடையேற்றலாம், ஆகவே இங்கு தயாரிப்பாளர் மாவட்ட சுகாதாரப் பிரிவு என்பதாகும்.
– நாடகத் தயாரிப்பாளர் என்பவர் நாடகத்திற்கான திட்டம், நாடக இயக்குனர் தெரிவு என்பவற்றிற் கவனம் செலுத்த வேண்டும். நாடகம் தொடர்பான எல்லா விடயங்களையும் இவரே கவனிக்க வேண்டும். உதாரண மாக எழுத்துப் பிரதியை வாங்குதல் முதல் தொழில்நுட்பக் கலைஞர் தெரிவு வரை மட்டுமல்லாது அரங்கு, பார்வையாளர் போன்ற எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.
நாடக ஆசிரியர் (Script writer)
நாடகப் பிரதிகளை / எழுத்துருவை சிருஷ்டிப்பவர் நாடகாசிரியர். இவர் ஒரு கலைஞன். உலக நாடக அரங்க வரலாற்றிலே சிறந்த நாடகாசிரியர் கள் பலரைக் காண்கின்றோம். சோபோகிலிஸ், சேக்ஸ்பியர், பேணாட்சா, இப்சன், பிறெட், செக்கோவ், காளிதாசன், பவபூதி, பாசன், இராமானுஜம், மங்கை, வேலு சரவணன்,சுந்தரலிங்கம், கணபதிப்பிள்ளை , சங்கரதாஸ் சுவாமிகள், சம்பந்த முதலியார், சரச்சந்திரா, தம்மயாகொட, மௌனகுரு, —- ஜீவநதி அரங்கக் கட்டுரைகள்
குழந்தை சண்முகலிங்கம்… இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே போகும் அளவிற்கு சிறந்த பல நாடகாசிரியர்கள் எம் மத்தியில் வாழ்ந்துள்ளனர். அவர்கள் யாவரும் அவர்கள் படைத்த பாத்திரங்களால் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். ஏன் சேக்ஸ்பியரை படிக்கிறோம்? ஏன் காளிதாசனைப் படிக்கிறோம்? என்றால் அந்த மனித நிலைச் சுட்டுகைக்காகவே. ஆகவே தான் அவர்கள் சிருஷ்டிகர்த்தாக்கள் ஆயினர்.
அந்த வகையிலே நாடக ஆசிரியர் என்பவர் சிறந்த படைப்புக்களைப் படைப்பவராக இருத்தல் வேண்டும். மேலைத் தேயங்களில் அநேகமாக ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு நாடகாசிரியர் இருக்க வேண்டும். அல்லது இருப்பார் அவரே நாடகம்எழுதி அங்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைப்பார்.
நாடகம் எழுதும் ஆசிரியர் சமூகப் பொறுப்புள்ளவராகவும் சமூக பிரக்ஞை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். சமூகத்தைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும். அத்துடன் நாடக நுணுக்கங்கள் பற்றியும் அது பற்றிய தெளிவும் நாடகாசிரியருக்கு இருத்தல் வேண்டும்.
நெறியாளர்
நாடகாசிரியரால் எழுதப்பட்ட எழுத்துருவுக்கு உயிர் கொடுப்பவர் நெறியாளர். நாடகப்பிரதி எலும்புக்கூடு என்றால் தசையும் இரத்தமும் கொடுத்து நடமாட விடுபவன் நெறியாளனே.
முன்னர் கூறியது போன்று முழு அளிக்கைக்கும் பொறுப்பு இவரே. பன்முகத் தன்மை வாய்ந்த இவரது செயற்பாட்டிற் கவனமும் இறுக்கமும் வேண்டும். கற்பனை வளமுள்ள சமூக ஆர்வம் கொண்டவராக இருத்தல் வேண்டும். வெறுமனே நேரடியான விடயத்தைக்கூறாது. புதிய வெளிப்பாடு களைப் பார்வையாளருக்குக் காட்டுதல் வேண்டும். பண்பாட்டின் வேரில் நின்று படைக்க வேண்டும். இதனாற்றான் இவனை மேடையின் படைப்பாளி என்கின்றோம்.
இத்தகைய நெறியாளர் என்பவர் நாடகம் பற்றிய அனைத்து விடயங் களையும் அறிந்தவராக இருப்பார். நடிகர்களின் திறமைகளை வெளிக்கொணர் பவர் இவரே. நடிபாகமாடும் நடிகர்களுக்குரிய பாத்திரங்களைச் செவ்வனே வழங்கி, நாடகத்தைச் சிறப்புடைய தாக்குபவர். நாடகத்திற்கு வேண்டிய துணைக்கருவிகளையும் துணைச்சாதனங்களையும் ஒழுங்கு படுத்தும் பொறுப்பும் இவருடையதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக நாடகாசிரியரின் பிரதிக்கு ஏற்றவாறு முழு நாடகத்தையும் திட்டமிட்டு அந்த எழுத்துருவுக்கு உயிர் கொடுப்பவர் எம்மத்தியில் நெறியாளரே. அனைத்து செயற்பாடுகளையும் செய்வதன் காரணமாக நாடகத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவரே காரணகர்த்தா . —–06
-நெறியாளர் கையாளும் இரண்டு பொருட்கள் ஒன்று நடிகர், மற்றயது மேடை என்பர், நடிகன் எவ்வாறு மேடையில் அசைதல், பாவித்தல் போன்ற விடயங்களும் முக்கியமாகின்றன. நடிகனைப் பொறுத்தளவில் அவனது உடலும் குரலும் பிரதானமானவை. நடிகன் தனது வெளிப்பாட்டுக்கு நான்கு அம்சங்களைப் பயன்படுத்துகிறான் என்பர்.
- உடல்வழி வெளிப்பாடு (ஆங்கீக அபிநயம்)
02. குரல்வழிவெளிப்பாடு (வாச்சிக அபிநயம்)
03. உணர்ச்சிவழிவெளிப்பாடு (சாத்வீக அபிநயம்)
04. காண்பிய வழிவெளிப்பாடு (ஆகார்ய அபிநயம்) இத்தகைய வெளிப்பாட்டுக்குத் துணைச்சாதனங்கள் அவசியம். அவையாவன. - காட்சி
2. வேடஉடை
3. ஒப்பனை
4. ஒளி
5. இசை, இசையற்ற சத்தங்கள்
இத்தகைய துணைச்சாதனங்களை நடிகனுக்கு வழங்குபவர்கள் கலைஞர்கள், கைவினைஞர்கள் ஆவர். காட்சியை வழங்குபவன் காட்சியமைப் பாளன். அதே போன்று வேடஉடை, ஒப்பனையாளன், ஒளி அமைப்பாளன், இசை அமைப்பாளன் எனப்பலர் நடிகனுக்குத் துணையாகச் செயற்படுவர்.
காட்சி அமைப்பு என்பது குறிக்கப்பட்ட நாடகத்திற்குரிய காட்சி அமைப்பாக அமைய வேண்டும். காட்சி அலங்காரம், காட்சி விதானிப்பு எனப் பலவாறு அழைக்கலாம். காட்சி அமைப்பினர் நெறியாளருடன் இணைந்து காட்சிகளைத் திட்டமிட வேண்டும். அப்போதுதான் நாடகத்தின் மனநிலை அதன் பின்புலம், குறியீடுகள் என்பன புலப்படக் கூடிய வகையிற் காட்சியை வடிவமைத்துக் கொள்ளலாம். காட்சி அமைத்துக் கொள்ளும் விதம், நாடக வகைக்கேற்ப மாறுபடும். பொதுவாக மூன்று பெரும் பகுதிக்குள் அடக்குவர்.
- கற்பிதவாத நாடகங்களுக்குரியன
2. யதார்த்தவாத நாடகங்களுக்குரியன
3. யதார்த்தமல்லாத நாடகங்களுக்குரியன.
காட்சியைக் கொண்டு பார்வையாளன் நாடகத்தின் காலத்தை, களத்தை, பண்பாட்டை, இடத்தை, மனநிலையைக் கண்டு கொள்ளுவான்.
வேட உடைகள் கூட வேட உடை விதானிப்பாளனாற் செய்யப்படுவது. மேற்குறிப்பிட்டவாறு நாடகத்தில் சூழலுக்கேற்றவகையில் அதற்குரிய ஆடைகள் அணியப்படல் வேண்டும். இலக்கிய நாடகங்களுக்குரிய ஆடைகளை யதார்த்த நாடகங்களில் அணிய முடியாது. ஆகவே வேடஉடை விதானிப்பாளன் அதற்குரிய ஒளி அமைப்பாளன், காட்சி அமைப்பாளனுடன் கலந்துரையாட –
வேண்டும். ஏனெனில் பாத்திரத்திற்குரிய ஆடையை தீர்மானித்த பின்னர் அதற்கு மாறுபாடான (Contrast) வர்ண ஒளியைப் பாய்ச்சினாற் பாத்திரத்தின் பொருத்தப்பாடு சீர்குலைந்துவிடும்.
ஒப்பனையும் அவ்வாறே. ஒப்பனைக்கலை இன்று வளர்ந்து விட்டதைக் கண் கூடாகக் காணமுடிகிறது. பாத்திர இயல்புக் கேற்றவாறு ஒப்பனை செய்தல் பொருத்தமானது. முதியவருக்கும் குழந்தைக்கும்ஒரே மாதிரியான ஒப்பனை பொருந்தாது.ஒப்பனையால் முதியவருக்கு நடிக்கவிருக்கும் கன்னங்கள் குழிய வேண்டும். அந்த நடிகர் குழந்தையாக நடிக்க வேண்டின் அந்த நடிகரின் கன்னங்கள் சற்று வெளித்தள்ளிப் பூரிப்பாக இருக்க வேண்டும். அதாவது பார்வை யாளன். நடிகனின் பாத்திரத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள. ஒப்பனை அவசியமாகின்றது. நாடக வகைக்கு ஏற்றவாறு ஒப்பனை அமைவது அவசியம்.
நாடகத்திற்கான ஒளி அமைப்பு என்பதும் நடிகனுக்குரிய துணைச் சாதனங்களில் ஒன்றாகும். நாடகம் தோன்றிய காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. கிரேக்கத்திற் சூரிய ஒளியில் நாடகம் இடம்பெற்றது. தொடர்ந்து தீப்பந்தங்கள், விளக்குகள் gaslight மின்ஒளி எனத் தற்போது விரிந்த நிலையில் ஒளி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நாடகத்தின் மனநிலையைத் தூண்ட ஒளி உதவும். ஒளி என்பது வெளியின் அழகியற் கோலம். ஒரு இடத்தை காண்” பிப்பது. அதுதான் ஒளியின் தன்மையாகும். திசை, செறிவு, வர்ணம் என்பவற்றாற் வாடி அளடி புலப்படும். தற்போது பல ஒளிவிளக்குகள் அறிமுகமாகி உள்ளன. பொட்டொளி பரப்பொளி பாதஒளி எனப்பல. இவற்றை எல்லாம் இயக்கும் ஒளி அமைப்பாளனே பிரதானம். வேடஉடையின் தன்மை, காட்சியின் தன்மை என்பன அறிந்து ஒளியைப் பாய்ச்சினாற் போதுமானது.
நாடகத்திற்கு இசை வழங்குபவர் இசை நெறியாளர். இவன் ஒரு சிறந்த கலைஞன். ஒட்டு மொத்தமான நாடகத்தின் மன நிலைக்கும் சூழலிற்குமேற்ற வகையில் இசை அமைத்துக் கொள்வார். இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை. எமது நாடகப்பாரம்பரியத்திற் கண்ணன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். பாத்திரங்களின் இயக்கத்திற்கேற்றவாறு இசை அமைக்கப்படும். இவ்விசை வாத்தியங்களாலும் வேறு சில பொருட்களாலும் ஏற்படுத்தப்படலாம். மேலும் இசையற்ற சத்தங்களும் நாடகத்திற்கு உதவுகின்றன.
மேற்குறிப்பிட்டவாறு ஒரு நாடகத்தைப் படைப்பாக்கம் செய்வதற்கு வேண்டியன தயாரிப்பாளர், நெறியாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் துணையான காட்சி வேடஉடை ஒப்பனை, ஒளி, இசை, போன்றவற்றை கையாள்பவர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கப்படுவதே ஒரு நாடகப் படைப்பாக்கமாகும். இந்த நாடகப் படைப்பாக்கமானது பார்வையாளர் முன்னிலையிலே முடிவடைகின்றது.